CHILDREN'S DAY 2017

“குழந்தைகள் தின விழா” 2017

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் 14/11/2017 செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முனைவர் Z. ஆனி விஜயா,I.P.S.., தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி பேசினர். குழந்தைகள் தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மாறுவேடப் போட்டி, ஆடல், பாடல், நாடகம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பரிசளித்து பாராட்டி முனைவர் Z. ஆனி விஜயா,I.P.S.., பேசியதாவது, குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். நீங்கள் நன்றாகப் படித்தால் தான் உயர்ந்த அதிகாரிகளாக பொறுப்பேற்க முடியும். அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்ட முடியும். குழந்தைகள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும், வளர்வதற்கும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும் என்றார். நிகழ்வில் முனைவர் Z. ஆனி விஜயா, I.P.S.., தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட கண்காணிப்பாளர், SRV. பள்ளி இணைச் செயலர் B. சத்யமூர்த்தி, முதல்வா் க.துளசிதாசன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியா்கள் கலந்துக்கொண்டனா்.

Login


Visitors Counter