READ TRICHY INAUGURATION

READ TRICHY INAUGURATION - 2017

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் 18/11/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று "திருச்சியே வாசி" என்னும் விழிப்புணர்வு வாசிப்பு இயக்கத்திற்கான துவக்கவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும் இலக்கியவாதியுமான உயர்திரு. கரு. பழனியப்பன் அவர்கள் கலந்துகொண்டு 'திருச்சியே வாசி" நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கியதாவது, பள்ளிப் பாடங்களைத் தாண்டி, வெளிப் புத்தகங்களை இளமையில் பயிலும் படிக்கும் பழக்கம், மற்றவர்களிடம் இருந்து நம்மைத் தனித்துவமானவர்களாக எடுத்துக் காட்டும். பொறியியாளராகவோ, மருத்துவராகவோ நாம் பள்ளிப் பாடங்களை படிக்கிறோம். ஆனால், 18 வயதில் ஒரு வாக்காளராக நம்மை தயார் செய்வதற்கு, இந்த சமூகத்தைப் புரிந்து கொள்வதும், நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிப்பதும் அவசியம். சரியானவர்களைத் தேர்ந்தெடுக்க வாசிப்பு பழக்கம் நமக்கு வழிகாட்டும். தினசரி எளிமையாக 10 பக்கங்கள் வாசித்தாலே, வருடத்தில் 3,650 பக்கங்கள் வாசிக்கமுடியும். வாசிப்பு புதிய சொற்களை அறிமுகப்படுத்தும், வாசிப்பு பழக்கம் கைவரப் பெற்றவர்களால் தன்னம்பிக்கையுடன் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திப் பேசமுடியும். நினைவாற்றலுடன் எழுதவும் முடியும். வாசிக்க வாசிக்க தான் இந்த உலகம் எத்துணை அழகானது, அற்புதமானது என்பது நமக்கு புரியும் வரும். வாழ்வின் கஷ்டமான பொழுதுகளையும் ரசித்து வாழும் பக்குவத்தையும் தரும். இத்தகைய வாசிப்பு எனும் பண்பாட்டு நிகழ்வை "திருச்சியே வாசி" மாணவர் இயக்கத்தின் மூலமாக முன்னெடுத்திடும், பள்ளி நிர்வாகத்தினரையும், மாணவர்களையும் வாழ்த்துகிறேன் என்றார். வரும் வாரங்களில் வாசிப்பை மையப்படுத்தி மாணவர்கள் பேரணி நிகழ்த்துகிறோம்... திருச்சி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுவிதமான புத்தகங்களை வாசிக்க இருப்பதாக பள்ளி முதல்வர் திருச்சியே வாசி நிகழ்வு பற்றி பேசினார். நிகழ்வில் திரைப்பட இயக்குநரும் இலக்கியவாதியுமான உயர்திரு. கரு. பழனியப்பன், SRV. பள்ளி இணைச் செயலர் B. சத்யமூர்த்தி, முதல்வா் க.துளசிதாசன் மற்றும் மாணவர்கள், ஆசிரியா்கள் கலந்துக்கொண்டனா்.

Login


Visitors Counter