eduquest2017

EDUQUEST - 2017

நம் ஊரில் ஓர் அழகிய பண்பாடு உண்டு சொந்தங்கள் எல்லாம் பண்டிகை / திருவிழா நாட்களில் ஒன்றிணைந்து விட்டால், குடும்பத்தோடு வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை பண்பாடாக கொண்டிருப்பதைப் போல், பள்ளிகளும், கல்லூரிகளும் கல்வி சார்ந்த தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, கற்றல் நடவடிக்கைகளை செயல்பாடுகளை ஆய்வு செய்வதனை பண்பாடாக்க வேண்டும். கல்வி என்பது ஒரு அரசியல் நடவடிக்கை என்பார் கல்வியாளர் பாப்லோர் பிறையாரே. நம்மை நிர்வகிக்கும் நம் வாழ்வியலை, அரசு அதிகாரிகளை காண்பதையும் அவர்கள் ஒரு நாட்டினை ஒரு மாநிலத்தினை நிர்வகிக்கும் நாள்தோறும் எவ்வாறு நிர்வாகிக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் உணர்ந்து எங்கள் பயணத்தை இரண்டாக பிரித்துக் கொண்டோம். அரசியல் நடவடிக்கைகளை அறிதல் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் திருமிகு. ஆர். பாலகிருஷ்ணன் IAS, இறையன்பு IAS உதயச்சந்திரன் IAS என்ற மூன்று அதிகாரிகளின் அனுபவங்களின் வழியாக ஓர் ஆசிரியன் என்பவன் தலைவனாக பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தையும் சிக்கலான சூழலில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறையினரை அறம் சார்ந்து உருவாக்க வேண்டியப் பொறுப்பையும் பற்றி அவர்களுடன் உரையாடி விவாதித்து இந்த பயணத்தில் இரண்டாம் நாள் காலை மிக எதிர்பார்ப்புடன் ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மாகாத்மா காந்தியின் பேரனை சந்திக்கப் போகிறோம் என்று ஆசிரியர்கள் அனைவரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தானர். கோபால கிருஷ்ண காந்தி மிக அழகாக எளிமையாக அரங்கிற்குள் வந்தார். ஒரு அசாத்தியமான அமைதி அரங்கிற்குள் நிலவியது. ஆசிரியர் அனைவரின் கண்களிலும் மனங்களிலும் காந்தியையே நேரடியாக பார்ப்பது போல் இருக்கிறது என்று ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

G.S. Poongodi, Eng. Dept.

“Great men always work in Silence” The trip to Chennai became the evident of above mentioned statement. The self images of the teachers were shattered. One of The heirs of our father of our nation Mahathma Gandhiji, Dr. Gopala Krishna Gandhi, is truly inspiring personality. He detaches himself from Gandhiji and by his own work he became fame. We should practice this quality of detachment. People attach themselves very fondly to the worldly things. The sense of belonging must be loosed. We should not narrow docon our choices. The world is wise and every door is open. But we concentrate only on limited doors such as medicine and engineering. All the fields are enter linked. Appreciation of art is needed for engineering. Engineering is needed for medicine. So it is the need of an hour to widen our knowledge to become a mutti folded personality.

ஜான் பிரிட்டோ

JEE, IIT, NEET போன்ற துறைகளுக்கு மாணவர்களை தயாரிக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தங்களது துறைகளில் செழுமையும் அதோடு மற்ற துறைகளில் போதுமான அறிவோடு இதங்களை தயார்படுத்தி கொள்ளுதல் தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. நாங்கள் சென்று வந்த IIIT, IITDM, IITMRD, IMS இவற்றில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகுந்த வருத்தத்தை தந்ததோடல்லாமல் இனிவரும் காலங்களில் தமிழக மாணவர்களை குறிப்பாக நம் பள்ளி மாணவர்களையாவது அங்கு படிக்கும் தகுதியோடு உருவாக்கிவிட வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக உள்ளது.

BRK:

மனதைத் தொட்ட சென்னை அனுபவம் ஆசிரியர்களின் (குடும்பத்தினரின்) நடனம், அவர்களுடன் தினமும் நடைபயிற்சி, ஒன்றாக உணவு அருந்தியது, இரவு நேரங்களில் ஒன்றாக கலந்துரையாடியது என அத்தனையும் மனதை தொட்டவை. ஒரு துறை சார்ந்த ஆசிரியர் என்றால் அவர் அத்துறையில் மட்டும் சிறந்து விளங்கினால் போதும் என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன். ஆனால், அந்த கர்வத்தை உடைத்து எரிந்து விட்டார்கள். IIT பேராசிரியர்கள். ஒவ்வொரு பேராசிரியர்க்கும் என்ன ஒரு! அறிவு? அவர்களிடம் என்னவொரு! தெளிவு? பொறுமை இவர்களை பார்க்கும் பொழுது, சற்று பொறாமையாகத் தான் இருக்கிறது. காந்தியின் பேரனாகிய திருமிகு. கோபால கிருஷ்ண காந்தியை சந்தித்தது, அவருடைய பேச்சு சற்றே சிந்திக்க தூண்டியது. 78 வயதிலும் குரலில் என்னவொரு தெளிவு, அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்கள் எல்லாம் சமுதாயம் பற்றி சிந்திக்க வைத்தது. மேலும், அகிம்சா பற்றி அவர் கூறிய கருத்து, “பயப்படாம இருக்கிறது, பயப்படுத்தாம இருக்கிறது” அருமை. மேலும், அவர் கூறியதில் “நம்பிக்கை மற்றும் தஞ்சம் இவை இரண்டும் சேர்ந்தது தான். “விசுவாசம்” என்றதும் தான் பணிபுரியும் “அசோகர் பல்கலைக் கழகத்தில்” மாணவர்களிடத்தில் இருந்து தான் கற்றுக் கொள்கிறேன் என்று கூறியது மிகவும் பிடித்திருந்தது.

ராதிகா

திரு. விஜயகுமார், திரு. கஹன்தீப் சிங் அவர்கள். தலைமைச் செயலகத்தில் நாங்கள் விவாதம் நடத்துவோம் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தலைமை செயலகத்தை பார்த்த பிரமிப்பை விட, விஜயகுமார் IAS அவர்களின் விருந்தோம்பலும், கஹன்தீப் சிங் IAS அவர்களின் தமிழ் மொழி வளமும், அதிசயக்க வைத்தது. தெளிந்த சிந்தனை, தொலைநோக்கு பார்வை, சிறந்த திட்டமிடல், என்று அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகளையும் தெளிவாக எங்களுக்கு புரியும் படி அவர்கள் உரையாற்றியது, அரசாங்க அதிகாரிகளின் முக்கியத்துவத்தை புரிய வைத்தது.

செ. பிரபாகரன், விலங்கியல் துறை

IIITDM, பொறியியல் கல்லூரி எல்லா பாடத்தையும் ஆராய்ச்சியுடன் கற்று கொடுப்பது உ.தா. ஜப்பானில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் ரோபோக்களை இயக்குவது சிறப்பு. நான் கண்ட ஆளுமைகளில் திரு. D. கோபால் கிருஷ்ண காந்தி (காந்தியின் நேரடி வழி பேரன்) மிக எளிமை. அவரின் பார்வையில் காந்தியம் என்பது நீ பயப்படாமல் இருப்பதும், அடுத்தவரை பயமுறுத்தாமல் இருப்பதும், அவரின் வளர்ச்சி அவரால் மட்டுமே, என்றது “Social Image Breaking அவரின் தமிழ் அழகாக அமைந்தது.

R. இமாகுலேட் ரஞ்சனி

கல்வி என்பது ஒரு தேடல் என்பதை உணர வைத்தது இந்த சென்னை பயணம். ஆசிரியர் பாடப் புத்தகத்தை கற்பிப்பவர் அல்ல திறன்களை மாணவரிடத்தில் வளர்பவர் என்பதை உணர்த்தியது இந்த கல்வி நிறுவனங்கள். ஓர் வாலிபர் போல் துள்ளி ஆர்வமுடன் எங்களை சந்திக்க வந்த, திரு. B.S. ராகவன் ஐயா அவர்கள், அவர் துவங்கும் போதே கூறிய குறள்கள், மேலும், அவருடைய நினைவுகள் அடங்கிய நேரு முதல் நேற்று வரை என்ற புத்தகத்தில் கடைசி பத்தில் இருந்து அவர் கூறிய சில வரிகள், அவர் அவரையே கேட்டு கொண்ட கேள்வி, எனக்கு இன்னொரு முறை இந்த வாழ்க்கை ஆதியோடு அந்தமாக வாழ வாய்ப்பு கிடைத்தால் நான் என்னவாக ஆகியிருப்பேன். ஒரு நொடி கூட தாமதிக்காமல் நான் தரும் பதில் ஆசிரியன் அல்லது மருத்துவன். இந்த இரண்டு பணிகள் மூலமாக தான் மனிதன் தெய்வத்தன்மை பெறுகின்றான். அறிவும் ஆரோக்கியமும் செரிந்திருக்கும்ன் என் நாடுதான் மற்ற எல்லா சாதனையிலும் முன்னணியில் இருக்க முடியும். அறிவும் ஆரோக்கியமும் உள்ள மாணவர்களை உருவாக்குவது எனது கடமை என்பதை உணர்ந்த ஆசிரியனாக சிந்தனையில் மாற்றம் கொண்டு வீறு நடை போடுவேன்.

R. ஜெயபிரபா, UG Chemistry

Mr. உதயசந்திரன் IAS, அவர்கள் பேசும் பொழுது, யாருக்கும் பயம் இல்லாமல் எதையும் எதிர்க் கொள்ளும் வண்ணம் பேசிய கருத்துக்கள் பல மனதில் பதிந்தன. இறுதியாக அவரது கைப்பேசி எண்ணைக் கொடுக்கும் பொழுது, அனைத்து ஆசிரியர்களின் கருத்துக்களும் தன்னை வந்தடைய வேண்டும் என்ற நோக்கம் மதிக்கத்தக்கது.

அ. டேனியல் அமிர்தராஜ், இயற்பியல் துறை

எந்த ஒரு கட்டிடமும் மரங்களுக்கு மேல் உயர்ந்து நிற்கவில்லை. மரங்களை வெட்டி புதிதாக கட்டிடம் கட்ட அனுமதியில்லை என்று நான் தெரிந்து கொண்ட செய்தி கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. இந்தியாவின் தலைசிறந்த III-Madras இயற்கையின் கட்டுப்பாட்டில் இருந்தது. Prof. அருண் நரசிம்மன், இளங்கலை பொறியியல் பட்டம் தமிழ்நாட்டில் பயின்ற இவர், ஆய்வுப் படிப்பை அமெரிக்காவில் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஓர் ஆய்வை எங்களுக்கு விளக்கி கூறும் போதும், எளிய தமிழில், அவ்வப்போது சில ஆங்கில வார்த்தைகள், தவிர வேறு எந்த தொழில்நுட்ப பதத்தையும் பயன்படுத்தவில்லை. அனைத்து துறை ஆசிரியர்களுக்கும் புரியும்படி அவர் உரையாற்றியது என்னுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக இருந்தது. மனிதனின் கண்ணில், விழித்திரையில் செய்யும் அறுவை சிகிச்சை பற்றியது. இவர் ஒரு Mechanical Engineer ஆனால், இவருடைய ஆய்வு மருத்துவம் சார்ந்ததாக இருந்தது.

V. வினோதா, HRD.

நடனம் மட்டும் இல்லாமல் இசை, நாட்டிய நாடகம் மற்றும் இசை சார்ந்த நிகழ்வுகளும் அதற்க்கான பயிற்சி பட்டறையும் நடக்கிறது. முதன் முதலில் 1936-இல் நடப்பட்ட ஆலமரத்தடியில் “பரத நாட்டியம் Based on Ballad” முறையில் பயிற்றுவிக்கிறார்கள். இயற்கை வளத்தோடு ஒன்றி காணப்படும் கலாஷேத்ராவில் இருந்து விடைபெற மனமில்லாமல் விடைபெற்றோம்.

ராஜேஷ் History

இந்த மெரினா மண்ணில் கல்வியில் பாரிய மாற்றங்களை எப்போது ஏற்படும் என்று எண்ணிக் கொண்டே அலைகளை நோக்கி நடந்தோம். துப்பாக்கிகள் மூலம் பலூன்களை வெடித்தோம். குதிரை சவாரி செய்தோம். அனைத்திற்கும் மேலும், ஆழியின் சிற்றலைகளுக்கு நடுவே என்றும் அழியா நினைவுகளை என்றும் மறக்காமல் இருக்க சிலசில “Selfi”களையும் சிலசில “Groupie”களையும் எடுத்துக்கொண்டோம். இத்தனை விசயங்களை நாங்கள் இறங்கி கொண்டிருக்க, ஓய்வுக்காக பேரூந்தினுள் உட்கார்ந்திருந்த மற்றொரு ஆசிரியர் குழு, எங்களின் சேட்டைகளை பேருந்து இருந்தே இரசித்துக் கொண்டிருந்தது.

ரேவதி, Chemistry Dept.

எனது முதல் கல்வி பயணம் என்பதால் பயமாக இருந்தது. ஆனால், பள்ளி பேருந்து ஏறும் முன்பே என் சக ஆசிரியர் தோழர்களின் உதவியால், பயம் நீங்கியது. மகிழ்ச்சியாக கொண்டத்துடன் இருக்கும் மாணவர்களைப் போல அனைவரும் பயணித்தோம். நடனமும், பாடலுமாக தொடங்கிய பயணம் ஒரு கட்டத்தில் கல்வியின் விவாதமாக மாறியது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளை பகிர்ந்து கொண்டே வந்தனர். நடு வெயிலில் மணலில் தாகத்துக்கு தண்ணீர் கேட்டு கதறுவது போல, அறிவு வேண்டும்... வேண்டும்... என்று கதற வேண்டும்... என்று B.S. ராகவன் ஐயா கூறிய வார்த்தைகளை மனம் அசைப்போட்டு கொண்டே இருந்தேன் பள்ளிக்கு திரும்பும் வரை.

மோகன் CS Dept.

பள்ளி தாண்டி புதிய இடங்கள் போகும் போது தான் பரந்த உலகத்தின் தன்மை தெரிகிறது. மாணவர்கள் மதிப்பெண் பெற்றுவிட்டால் IIT-யில் படித்துவிடலாம் என்று நினைத்து இருந்தேன். அங்குள்ள மாணவர்களை பார்த்தவுடன் தான், அவர்கள் தொடர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் தான் அங்கு படித்து முடிக்கமுடியும் என்பதை புரிந்து கொண்டேன். நம் பள்ளி மாணவர்களையும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும். அப்பொழுது தான், புத்தகத்தை தாண்டி பரந்து விரிந்த கல்வி புரியும் என்று தோன்றியது.

ஜெகதீசன் PED.

தனது குரு B.S. ராகவன் IAS உள்ளே நுழைந்தவுடன் தம் உரையை நிறுத்திக் கொண்ட இறையன்பு IAS; நீ தொடர்ந்து பேசு என்று கூறிய B.S. ராகவன் IAS இருவருக்கு இடையேயான உறவுமுறை பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. இப்படி தான் நாமும், நம் மாணவர்களுடன் இருக்க வேண்டும் என்று புரிந்தது. B.S. ராகவன் IAS அவர்கள், ஜவஹர்லால் நேரு உடனான தம் அனுபவத்தை கூறும் பொழுது, நேரு சிறியதாக யார் மீதாவது கோபம் கொண்டாலும் உடனே அவர்களை கூப்பிட்டு அரவணைத்துக் கொள்வார் என்றார். நான் யார் மீதாவது கோபம் மட்டும்படுகின்றேனே தவிர யாரையும் அரவணைத்துக் கொள்வதே இல்லை என்று என்னைப்பற்றி நானே நினைத்துக் கொண்டேன்..

சண்முகம், வேதியல் துறை

IIITRP –இல் பார்த்த கொசு பிடிக்கும் இயந்திரம் பற்றிய ஆய்வு, மிகவும் வியக்க வைத்தது. மனித உடலில் சுரக்கும் வியர்வையை மணம் கொண்டு, இந்த கொசு பிடிக்கும் இயந்திரம் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

Login


Visitors Counter