XII & X Results 2016


XII & X Results 2016, Click read more to see our school performance in 2016



Read more

FORTHCOMING EVENTS


"Give me six hours to chop down a tree and We will spend the first four hours sharpening the axe" Next event will be Soon.....



Read More

 

From The President

அறிவாளர்களையும் சிந்தனையாளர்களையும் பள்ளிக்கு அழைத்து வருவதன் நோக்கமே ஆளுமைகளிடமிருந்து, சிந்திக்க கற்றுக் கொள்வதுதான். நாம் பிறருக்காகச் சிந்திப்பதே வாழ்வியல் விழுமியம். ஒவ்வொருவரும் மற்றவருக்காகச் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறோம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காகச் சிந்திக்கிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காகச் சிந்திக்கிறார்கள். மற்றவர்களுக்காகச் சிந்திக்கும் போதுதான், வாழ்க்கை அர்த்தப்படுகிறது. நாம் மற்றவரின் நலனுக்குச் சிந்திக்கிறோம் என்பது மற்றவருக்கும் புரிகிற போது, அந்தச் சிந்தனை “அன்பாக” மாறுகிறது. அன்பே வாழ்க்கையாகிறது. நம் பள்ளியின் தத்துவமே அன்புதான். அன்பே அழகு. அன்பின் துணைகொண்டு அனைத்தும் செய்வோம் மானுடம் செழிக்க சுவடுகள் பதிப்போம்.


  • Slide 11
  • Slide 15
  • slide7
  • slide1
  • slide5
  • slide9
  • slide10
  • slide2
  • slide4
  • Slide 13
  • slide8
  • slide6
  • slide3
  • Slide 12

Latest News



Harvest Awards 2016

சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் திருச்சி,ஜூலை 15: சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார் தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநரும் மற்றும் அரசு செயலருமான த.உதயசந்திரன். திருச்சிமாவட்டம்,சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற அறுவடை 2016- விருதுகள்வழங்கும் விழாவில் பங்கேற்று, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, மேலும் அவர் பேசியது: பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை மட்டும் பெரிதாக நினைக்காமல் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். படிப்பதுடன் நின்றுவிடாமல் சமூகப்பார்வையுடன் உடையவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். எஸ்.ஆர்.வி. பள்ளியில் பயின்று, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், கல்விச் செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்தமாணவர் பி.கோகுலநாதனுக்கு ரூ.1.08 லட்சம் உதவித் தொகையையும் உதயசந்திரன் வழங்கினார்.


CARRIER GUIDANCE:

மருத்துவம் பொறியியல் இந்த இரண்டை தாண்டி உலகம் எவ்வளவு பெரியது என்பதை மிக விஸ்தீரனமாக சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கமாக திசைகாட்டி 2016 என்ற பெயரில் ஒரு புதிய எழுச்சி மிகுந்த நிகழ்ச்சியை நடத்தியது. சுமாராக 4000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒரு பிரம்மாண்டமான மாநாட்டு பந்தலில் நடைபெற்றது.சென்னையிலிருந்து இத்துறை நிபுணர் திரு.நெடுஞ்செழியன் மிகவிரிவாக மேற்படிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.


DAWN 2016

2016ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் 04.06.16, 26.06.16 அன்று விடியல் 2016 நடத்தப்பட்டது. பள்ளி வரலாறு, தலைவர்கள், ஆசிரியர்கள், துறைகள் இயங்கும் விதம், மாணவர்களுக்கான நடைமுறைகள், பள்ளி நடைமுறைகள், பள்ளி செயல்பாட்டு திட்டங்கள், பள்ளி செயல்படும் விதம், நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகள், பாடத்திட்டம், தேர்வு முறைகள், பெற்றோர் கூட்டம், பள்ளியில் நடத்தப்படுகிற நிகழ்ச்சிகள், உணவு முறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தவிர்க்க வேண்டியவைகள் இப்படி பல்வேறு நடைமுறைகளை துல்லியமாக பெற்றோர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் ஒத்துழைப்பை நாடுகிற நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.


THE FAITH – BRIDGE COURSE 2016

பதினோறாம் வகுப்பில் பள்ளியில் இணைந்திருக்கின்ற புதிய மாணவ செல்வங்களுக்கு ஒரு வாரகாலம் THE FAITH – BRIDGE COURSE மிகச்சிறப்பாக நடைபெற்றது.வளர்ந்து வரக்கூடிய மாணவச் செல்வங்கள் பாடத்திட்டம் மட்டுமல்லாது வேறு பல விஷயங்களிலும் ஒரு அறிமுக அளவிலான திறன்களாவது பெற்றிருக்கவேண்டும். மதிப்பெண்கள் எத்துனை அவசியமோ அத்துனை அவசியம் வாழ்க்கைத்திறன்கள். மாணவர்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.பவா செல்லதுரை கதைசொன்ன போதும், எழுத்தாளர்.ச.தமிழ்ச்செல்வன் திரையிடல் மூலமாக சமூக அறம் போதித்த போதும், எழுத்தாளர்.பாஸ்கர் சக்தி கற்பனை திறனை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என விளக்கிச்சொன்ன போதும் மாணவர்கள் சிலாகித்துப்போனது முற்றிலும் உண்மை.


கணித பயிற்சிப் பட்டறை 2016

அகில இந்திய கணித ஆசிரியர்கள் சங்கம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கான கணித ஒலிம்பியாட் பயிற்சிப் பட்டறை நடத்திவருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் நமது பள்ளியிலிருந்து 25 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் ஆர்.புவனேஸ்வரி மற்றும் எஸ்.உமா மகேஸ்வரி பொறுப்பேற்று மாணவர்களை அழைத்துச் சென்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற இம்முகாமில் கணிதம் குறித்த புதிய சிந்தனை, வழக்கமான முறையிலிருந்து மாற்று வழியிலான தீர்வு காணும் முயற்சிகள் என பல விசயங்கள் கற்றுத்தரப்பட்டன. ஒலிம்பியாட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார் செய்துகொள்வது என்பது குறித்த முன்னோட்டமாகவும் அமைந்தது.


துளிர் 2016

விடுதி மாணவர்களுக்கான சிறப்புத்திட்டம் துளிர். விடு்தியில் தங்கிபடிக்கும் மாணவர்கள் படிப்புத்தாண்டி பல்வேறு விஷயங்களில் அறிவுத்தேடல் மிகுந்தவர்களாக உருவாக்கும் அமைப்பே துளிர்.ஞாயிற்றுக்கிழமைகளின் காலை நேரத்தில் துளிர்க்கும் இந்த நிகழ்வு மாணர்வகளை மனதைப் பதப்படுத்தி மெல்ல கைவிரல் பிடித்து மேலேற்றும் பணியைச் செய்துவருகிறது.பொதுஅறிவு குறித்த விவாதம்பேச்சு மற்றும் எழுத்துக்கலையில் பயிற்சி, தலைமைப்பண்பு, வாழ்க்கைத்திறன்கள், சினிமா புரிதல்,ஊடக அரசியல், இயற்கை, வரலாறு, கிராமம் நோக்கி – சோஷியல் மேப்பிங்என பல்வேறு தளங்களில் துளிர் இயங்குகிறது. இதனுடைய துவக்க விழா கடந்த 23.07.16 சனிக்கிழமை பேரா.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.மிக இயல்பாக நிகழ்ச்சியை நடத்தி தொடர்பு கொள்ளுதலின் முக்கியத்துவத்தை ஒரு டெமோ மூலம் மிக அழகாக விளக்கி புரியவைத்தார் பேரா.ஜி.பா.

STUDENTS LOGIN